தமிழ் நண்பன்

Tuesday, December 15, 2009

Anbe vaa

கடல் சேர முடியாத நதிகள்
மீண்டும் மலை திரும்புவதில்லை
காய்ந்து போவதைத் தவிர
அவற்றிற்கு
வேறு வழியுமில்லை... !

Anbe vaa

நான் சிரித்தேன்.. நீ சிரித்தாய்...
நான் அழுதேன்.. நீ அழுதாய்...
நான் காயப்பட்டேன்.. நீ கண்ணீர் சிந்தினாய்...
நான் காதலிக்கும்போது
ஏன் கண்மூடிக்கொள்கிறாய்?
உன் மௌனம் சம்மதமா...
இல்லை
மறுதலிப்பா?

Anbe vaa

வார்த்தை இல்லாமல்
வாய்ப்பு இல்லாமல்
உன் வட்ட விழி பார்க்க
இயலாமல்...
சொல்லாத காதலொன்று
சிக்கிக் கிடக்கிறது
என் நெஞ்சுக்குழிக்குள்

நீயே சொல்லிவிடேன்...
காதலை
முன்மொழியத்தான்
முடியவில்லை..
வழிமொழிந்தாவது
வருகிறேன்!!!

Anbe vaa

passions: எதையும் நிறுத்த
முடியாதவனாய்
வாழ்கிறேன்........

உன்னை
என்னுள்
நிறுத்தி கொண்டு

உன்
நினைவை
மனதுள் இருத்திகொண்டு ...

vairamuthuvin sethukkalkal

உன்னைச் சுற்றி
ஒளிவட்டம் தோன்றும்...
உலகம் அர்த்தப்படும்...
ராத்திரியின் நீளம்
விளங்கும்....

உனக்கும்
கவிதை வரும்...
கையெழுத்து
அழகாகும்.....
தபால்காரன்
தெய்வமாவான்...

உன் பிம்பம் விழுந்தே
கண்ணாடி உடையும்...
கண்ணிரண்டும்
ஒளிகொள்ளும்...

காதலித்துப்பார் !


தலையணை நனைப்பாய்
மூன்று முறை
பல்துலக்குவாய்...
காத்திருந்தால்
நிமிஷங்கள் வருஷமென்பாய்...
வந்துவிட்டால்
வருஷங்கள் நிமிஷமென்பாய்...
காக்கைகூட உன்னை
கவனிக்காது
ஆனால்...
இந்த உலகமே
உன்னை கவனிப்பதாய்
உணர்வாய்...
வயிற்றுக்கும் தொண்டைக்கமாய்
உருவமில்லா உருண்டையொன்று
உருளக் காண்பாய்...
இந்த வானம் இந்த அந்தி
இந்த பூமி இந்த பூக்கள்
எல்லாம்
காதலை கவுரவிக்கும்
ஏற்பாடுகள்
என்பாய்
காதலித்துப் பார்!

இருதயம் அடிக்கடி
இடம் மாறித் துடிக்கும்...
நிசப்த அலைவரிசைகளில்
உனது குரல் மட்டும்
ஒலிபரப்பாகும்...
உன் நரம்பே நாணேற்றி
உனக்குள்ளே
அம்புவிடும்...
காதலின்
திரைச்சீலையைக்
காமம் கிழிக்கும்...
ஹார்மோன்கள்
நைல் நதியாய்ப்
பெருக்கெடுக்கும்
உதடுகள் மட்டும்
சகாராவாகும்...
தாகங்கள் சமுத்திரமாகும்...
பிறகு
கண்ணீர்த் துளிக்குள்
சமுத்திரம் அடங்கும்...
காதலித்துப் பார்!


சின்ன சின்ன பரிசுகளில்
சிலிர்க்க முடியுமே...
அதற்காகவேனும்
புலன்களை வருத்திப்
புதுப்பிக்க முடியுமே...
அதற்காகவேனும்...
ஆண் என்ற சொல்லுக்கும்
பெண் என்ற சொல்லுக்கும்
அகராதியில் ஏறாத
அர்த்தம் விளங்குமே..
அதற்காகவேனும்...
வாழ்ந்துகொண்டே
சாகவும் முடியுமே
செத்துக் கொண்டே
வாழவும் முடியுமே...
அதற்காக வேணும்...
காதலித்துப் பார்!

ஒரு முறை காதலித்துப் பார்!

Anbe vaa

வலிகள் கூட சுகமானதுதான்
நீ தருகிற போது...
பிரிவுகள் கூட சுகமானதுதான்
உன் நினைவுகள் உடனிருக்கும்போது...
அழுகை கூட சுகமானதுதான்
உனக்காய் நான் அழும்போது...
வார்த்தையாய் காதலைச் சொல்வதில்
உடன்பாடில்லை எனக்கு...
வாழ்க்கையாய் அதை
வாழ்ந்து காட்டுகிறேன்
ஒரு வாய்ப்பு கொடேன்... !

Anbe vaa

உலகம் என்னை
உதறிய போதெல்லாம்
புன்னகைத்து நின்றேன்...
பற்றிக்கொள்ள உன் கரம்
இருக்கிற தைரியம் எனக்கு...

நீ என்னை
வேண்டாமென்றாலும்
என்னாலும் உதற முடியும்...
உன்னையல்ல..
என் உயிரை!!

Anbe vaa

உலகெல்லாம் ஓடி
உன் காதல் நீ தேட...
பத்திரமாய் உன் காதல்
ஒளிந்திருக்கும் எனக்குள்!!!
நீதான் நான் என
நான் கண்டுகொண்டேன்...
நாந்தான் நீயென
நீ அறிவதெப்போது... ?

Anbe vaa

எனக்குள் இருப்பது யாரென
எங்கெங்கோ தேடினாய்
உன் வீட்டின் பூட்டிய அறைக்குள்
நீ தொலைந்து போயிருப்பது
தெரியாமல்...

Anbe vaa

என்
ஆயுள் உள்ளவரை
உன் காதல் வேண்டும்... !
இல்லையேல்...
உன் காதல் உள்ளவரை
எனக்கு
ஆயுள் போதும்.. !