தமிழ் நண்பன்

Sunday, November 20, 2011

இதயங்கள் இணையவில்லை


அந்தக் கல்லூரியில்
விரிவுரை அறையில்
பார்வைகள் இணைந்து கொண்டன
அந்தக் கடற்கரையில்
இள வெய்யிலில்
கைகள் இணைந்து கொண்டன
அந்த உணவகத்தில்
மெழுகு திரியொளியில்
கால்கள் இணைந்து கொண்டன
அந்த கேளிக்கை விடுதியில்
மின்னும் வண்ண விளக்கொளியில்
நடனத்தில் உடல்கள் இணைந்து கொண்டன
வாழ்க்கைப் பாதையில்
உறவு சந்தியில்
இதயங்கள் இணையவில்லை
அந்த  மணவறையில்
இன்னொருத்தன் அருகில்
நீ இணைந்து கொண்டாய்.

மௌனக்கதறல்கள்


பெண்ணே!
உன் செவியில் கேட்கிறதா?
உன் விரல் படாத பூக்களின்
மௌனக்கதறல்களை.
பெண்ணே!
உன் கண்ணில் தெரிகிறதா?
உன் பாதம்படாத மண்துகள்களின்
ஏக்கப்பெருமூச்சுகளை.
பெண்ணே!
உன் மனம் அறிகிறதா?
உன் ஸ்பரிசம் படாத காற்றின்
அழுகை அலைவரிசையை.
பெண்ணே!
உன் இதயம் புரிகிறதா?
உன் பார்வைபடாத என் ஜீவனின்
மரண அவஸ்தைகளை.
பெண்ணே!
உன் ஆறாம் அறிவு உணர்கிறதா?
உன்னால் ஏங்கும் என் தேகத்தின்
உயிர் கசிவுகளை!

வயதுக்கு வந்த காதல்

உன்
முத்தத்தின் விண்ணகம்
வாய்க்காமல் போகையில்
உதடுகளில் உணர்கிறேன்
நரகத்தின் நகக் கீறல்களை



நீ
முத்தமிட்ட கணத்தில்
முளைத்த மன நடுக்கத்தில்
சூரியன் ஒளிய
காற்று உறைய
இதயம் மட்டும்
புவியீர்ப்பு விசையைப்
புறக்கணித்துப் பறந்தது.
இன்னோர் முத்தமிடு
நான்
இறங்கி வர வேண்டும்.
நிலவொளியின் நதிக்கரையில்
குளிர் காற்றின்
பொதுக்கூட்டத்தில்
உன்
விரல் தொட்ட வினாடியில்
உயிருக்குள் பறந்த பறவை சொன்னது
எனக்குள்
காதல் கூடாரமடித்திருப்பதை.
உன்
காதல் நினைவுகளைச் சுமக்கையில்
எனக்குள்
காமத்தின் சாரலடிக்கும்
என்பதை
உன் வெட்கத்தின் வாசலுக்குள்
சொல்லிச் செல்கையில்
நீ
சட்டென்று வெளிப்படுத்திய
போலிக் கோபத்தில்
புதைந்துகிடந்தது
நம் காதல்.
உன்
புகைப்படம் பார்த்துத்
துயில்வதை விட
உன்
புகைப்படம் பார்த்து
விழிப்பதை
விரும்பிய கணத்தில்
என் காதல் வயதுக்கு வந்திருந்தது.

நீயும் நானும்

பலருள் நானொருத்தி
உனக்கு;
உயிருள் நீயோருவன்
எனக்கு;
என்னை நினைக்க மறந்தாய்
நீ;
உன்னை நினைத்து வாழ்கிறேன்
நான்!

எனக்காய் அல்ல

நீ
கோபம் கொண்டு
கலட்டி வீசிய
செருப்பு நான்;
நீ
தூக்கி எறிந்ததும்
துடிக்கவே செய்கிறேன்,
எனக்காய் அல்ல;
உன் பாதங்களில்
முள் தைக்குமே என்று!

Saturday, October 8, 2011

என்னவளே

நீ என்னிடம்
பேசியதை விட,
எனக்காக பேசியதில்தான்
உணர்ந்தேன்

நமக்கான நட்பை..! 


Wednesday, September 7, 2011

ஏக்கத்தோடு........

என் வாசலில் கோலம் காத்திருந்தது........,

உன் வருகைக்காக.........!

என் ஜன்னலில் நிலவு காத்திருந்தது.........,

உன் அழகுக்காக.............!

என் தோட்டத்தில் பூக்கள் காத்திருந்தது........,

உன் புன்னகைக்காக........!

என் உடலில் இதயம் காத்திருந்தது...........,

உன் காதலுக்காக........!

எப்போது........,

கிடைக்கும் என்று ஏக்கத்தோடு........